புதன், 4 அக்டோபர், 2017

‘தூய்மை பழமொழி’

1.  1.     ‘டீவியை ஓரங்கட்டு
சுத்தத்தை பாட்டுக்கட்டு’

‘மௌசை பிடித்தால் போதுமா
மாப்பை பிடிக்க வேண்டாமா’

1.      ‘தூய்மையே இலக்கு
இளம்பிள்ளைகளை பழக்கு’
யாமறிந்த தூய்மையிலே
எங்கள் பள்ளி போல் இனிதாவது
எங்கும் காணோம்’

1.      ‘சுகமாயிருக்க சுத்தம்
செய்யாதே அசுத்தம்’

1.      ‘கழிவறையை கொண்டாடு
திறந்தவழிக்கு போராடு’

1.      ‘குப்பையை எறியாதே
பூமியை கிழிக்காதே’

1.      ‘குழந்தைகளே வாருங்கள்
குப்பையை ஒன்றாய் சேருங்கள்’

1.      ‘விரலுக்கு வேண்டாம் மோதிரம்
சாப்பிடும் முன் கைகழுவு சாஸ்திரம்
வீட்டுக்கு வீடு வாசல்படி
குப்பையை குப்பைத்தொட்டியில் போடு நல்லபடி’

1.      ‘காலை இரவு இருவேளை
பல் துலக்குவதே நல்வேளை’

1.      ‘பார்ப்பதெல்லாம் கண்ணாலே  
குப்பையை எடுக்க வேண்டும் தன்னாலே’ 

1.      ஒன்றும் ஒன்றும் இரண்டு
தினமும் குளிச்சா பூச்செண்டு

1.      கண்ணுக்கு மை அழகு
சுற்றுப்புறத்திற்கு தூய்மை அழகு

1.      பிறைநிலா வேண்டுமா
 நகவெட்டி எடும்மா

1.      ரோசாப்பூ வாசம்
குளித்தால் வீசும்

1.      ஆடி போனா ஆவணி
தலைக்கு குளிச்சா ஜோருநீ

1.      இரண்டும் மூன்றும் அஞ்சுதான்
குப்பையை எடுத்தா அழகு கொஞ்சும்தான்

1.      சுத்தமாயிருந்தா மிப்பு
மத்ததெல்லாம் டூப்பு

1.      நான்கும் நான்கும் எட்டு
முடியை சீவு பட்டு

1.      அணிகலன் எல்லாம் அணியாகுமா
காலணிதான் சரியம்மா !

1.      கைபட்டால் கண்ணாடி
ஒட்டடை அடித்தால் யோகமடி!

1.      ஆணுக்கு பெண் இளைப்பில்லை
கழிவறை கழுவினால் தப்பில்லை’

1.      எட்டு போட்டு நடநட
நோய் எட்டிப் போகும் மளமள’

1.      வீட்டுக்கு வீடு வாசல்படி
குப்பையை தொட்டியில் போடு நல்லபடி’

  காப்பது சுத்தம் 

1.      குப்பை விரும்பேல்      

வெ. விஜயலெட்சுமி
தலைமை ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
கோவிலாச்சேரி,
கும்பகோணம் – 612 503